எலான் மஸ்க் மீது திரும்பியுள்ள பிரித்தானிய இராணுவத்தின் பார்வை
உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க்கை (Elon Musk), பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவின் (UK) தேசிய பாதுகாப்பு பணிகளை திசை மாற்றும் ஹோம்லேண்ட் பாதுகாப்பு (Homeland Security) குழுவின் கீழ் அதிகாரிகள், எலான் மஸ்க் மற்றும் பலரின் சமூக ஊடக பதிவுகளை கண்காணித்து வருகின்றனர்.
இந்த கண்காணிப்பு, "பிரித்தானியாவிற்கு உயர்ந்த சேதத்தை ஏற்படுத்தும் அபாயங்களை" குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.
மஸ்க்கின் பதிவுகள்...
சமூக ஊடகங்களில் பதிவுகள் எவ்வளவு அதிகம் பகிரப்பட்டுள்ளன, யார் அவற்றில் ஈடுபடுகிறார்கள் உள்ளிட்ட விடயங்களை ஆராய்வது இதன் நோக்கம் ஆகும்.
எலான் மஸ்க், பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெஸ் பிலிப்ஸின் மீது கருத்துக்களை பதிவு செய்ததைத் தொடர்ந்தே இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவர், பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் மீது அவதூறு பரப்பும் வகையிலான பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், பிரித்தானிய அரசாங்கத்தை குற்றம் சாட்டும் வகையில் பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக, grooming gang குறித்த புதிய விசாரணைக்கு அரசு மறுப்பு தெரிவித்ததன் பின்னர் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், மஸ்கின் கருத்துகள் பிரித்தானியாவில் பாதுகாப்பு சவால்களை உருவாக்குமா என்பதற்கான கவலை காரணமாகவே இந்த கண்காணிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
