இளவரசி டயானாவின் நினைவு நாளில் கேட் மிடில்டனின் மனதை தொடும் செயல்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது முன்னோடி இளவரசி டயானாவுக்கு மீண்டும் ஒருமுறை சிறப்பான முறையில் அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல்களின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான இந்த நினைவு தினத்தை முன்னிட்டு வார இறுதியில் இளவரசி கேட் மிடில்டன் என்ன அணிவார் என ராயல் ரசிகர்கள் ஆவலுடன் ஊகித்து வருகின்றனர்.
இளவரசி டயானா
இளவரசி டயானாவை நினைவுப்படுத்தும் கேட் கடந்த 1989ம் ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற அரச குடும்ப விழாவில் கலந்து கொண்டபோது இளவரசி டயானா அணிந்திருந்த கை வளையலுடனும், காதணிகளுடனும் அவரது 2021ம் ஆண்டின் நினைவு தினத்தில் இளவரசி கேட் மிடில்டன் தோன்றி மரியாதை செலுத்தினார்.
மேலும் 2021ம் ஆண்டு G7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போதும் வேல்ஸ் இளவரசி கேட், தனது மாமியார் இளவரசி டயானாவின் வளையல்களை அணிந்து வந்தார்.
இதுபோன்ற பல நிகழ்வுகளில் இளவரசி டயானாவின் ஆபரணங்களை இளவரசி கேட் வழக்கமாக அணிந்து வருகிறார், அதிலும் அந்த வளையல் கேட்டின் விருப்பமான ஒன்றாக மாறியுள்ளது.
இளவரசி டயானாவை நினைவுப்படுத்தும் கேட்
இவ்வாறு இளவரசி டயானாவில் அணிகலன்களுடன் இளவரசி கேட் தோன்றுவதால் பெரும்பாலான சமயங்களில் தனது மாமியார் டயானாவை தற்போதைய வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் நினைவூட்டுகிறார்.
அரச குடும்பத்தில் சக்தி வாய்ந்த நபர் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் அரச குடும்பத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நபர் என அரச வல்லுநர் ஒருவரால் பாராட்டப்பட்டுள்ளார்.
அத்துடன் பத்திரிக்கையாளரும் ராயல் நிபுணரான கமிலா டோமினி டெய்லி எக்ஸ்பிரஸிடம் தெரிவித்த தகவலில், அவர்களின் தலைமுறை வரும் போது, நீங்கள் (கேட் மற்றும் இளவரசர் வில்லியம்) அரச அறையை ஆள்கிறார்கள் என கூறலாம் என குறிப்பிட்டுள்ளார்.