பிரித்தானியாவில் இருந்து வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தில் இருந்து இன்று முற்பகல் இலங்கை வந்த நிலையில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பிரித்தானியார் பல கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை கடத்த முற்பட்ட வேளையில் விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.
பிரித்தானிய பிரஜை
குறித்த நபரின் பயண பொதியை சோதனையிட்ட வேளையில், 01 கிலோ 370 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும் 908 கிராம் குஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் சந்தைப் பெறுமதி 3 கோடி ரூபாவுக்கும் மேல் என கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை நீர்கொழும்பில் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 10 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam