மகிந்தவை அடுத்து நாமலுக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம்
தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் தனக்கும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் சொற்பொழிவை நிகழ்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களால் வெளியிடப்பட்ட கடும் அழுத்தம் காரணமாக, மகிந்த மற்றும் நாமலின் உரையாற்றும் வாய்ப்பு தடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினரும், இலங்கை தொடர்பான இங்கிலாந்து அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் முன்னாள் தலைவருமான மைக்கேல் மோரிஸ் பரோன் நேஸ்பியிடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார உறவு
இருவருக்கும் இடையிலான நேரடி சந்திப்பின் போது நாமல் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், முதலீடு மற்றும் பொருளாதாரத் திட்டங்களையும் நாமல் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒக்ஸ்போர்டு யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் சங்கங்களில் சொற்பொழிவுகளை வழங்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டங்களும், இதன் காரணமாக விரிவுரைகள் இரத்து செய்யப்பட்டமையும் கடந்த வாரம் பேசு பொருளாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 16 மணி நேரம் முன்
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam