பிரித்தானிய பிரதமரின் புதிய அறிவிப்பு:குவியும் பாராட்டுக்கள்
பிரிட்டன்-இந்தியா இளம் வல்லுனர்கள் திட்டத்தை அந்நாட்டின் தொழில் துறையினர் மற்றும் மாணவர்கள் வரவேற்றுள்ளனர்.
புதிய திட்டம்
இந்தியாவைச் சேர்ந்த, 18 - 30 வயது வரையிலான மாணவர்கள் மற்றும் பல்வேறு துறை வல்லுனர்கள் இரண்டு ஆண்டுகள் பிரிட்டனில் தங்கியிருந்து படிக்கவும், பணியாற்றவும், 'விசா' வழங்கும் பிரிட்டன் - இந்தியா இளம் வல்லுனர்கள் திட்டத்தை, அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 3,000 இளைஞர்களுக்கு விசா வழங்கப்படவுள்ளது.
இதேபோன்று, பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இந்திய அரசு விசா வழங்கவுள்ளது.
இது வாழ்நாள் வாய்ப்பு

லண்டன் மேயர் நிகோலஸ் லயான்ஸ் இதை மிகச்சரியான முடிவு என பாராட்டியுள்ளார்.
இதேவேளை பிரிட்டனைச் சேர்ந்த தொழில் துறையினர் மற்றும் மாணவர்கள் இடையே இத்திட்டத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. '
இது வாழ்நாள் வாய்ப்பு' என, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri