சரித்திரத்தின் பக்கங்களில் இன்னொரு மார்கரெட் தாட்சராக-லிஸ் டிரஸ்!

United Kingdom
By Jenitha Sep 05, 2022 06:58 PM GMT
Report

பிரித்தானியாவின் பெண் பிரதமர்களின் வரிசையில் மார்கரெட் தாட்சர், தெரசா மே ஆகியோரைத் தொடர்ந்து பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் லிஸ் டிரஸ்.

பிரித்தானிய பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து புதிய பிரதமர் தெரிவுக்கான தேர்தல் நடைபெற்றது.

போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் புதிய பிரதமருக்கான போட்டியில் பங்கேற்றனர்.

Rishi Sunak and Liz Truss

தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக தேர்வாகி உள்ளார் லிஸ் டிரஸ்.

யார் இந்த லிஸ் டிரஸ்

Liz Truss

1975 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் பிறந்தவர் தான் லிஸ் டிரஸ். இவரது இயற்பெயர் மேரி எலிசபெத் டிரஸ் என்பதாகும்.

இவரது தந்தை கணிதப் பேராசிரியராகவும், தாயார் செவிலியராகவும் பணியாற்றியவர்கள்.

லீட்ஸில் உள்ள ரௌண்ட் ஹே பள்ளியில் பயின்ற டிரஸ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

திருமணம்

சரித்திரத்தின் பக்கங்களில் இன்னொரு மார்கரெட் தாட்சராக-லிஸ் டிரஸ்! | Uk Election New Prime Minister Conservative Party

பட்டப்படிப்புக்கு பிறகு பிரபலமான நிறுவனங்களில் கணக்காளராகப் பணிபுரிந்துள்ளார்.

நிறுவனத்தில் தன்னுடன் சக கணக்காய்வாளராக பணிப்புரிந்த ஹக் ஓ லியரியை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

அரசியல் பிரவேசம்

கல்லூரியில் படிக்கும் போதே அரசியலில் அடியெடுத்து வைத்தவர் தான் டிரஸ், ஆரம்பத்தில் லிபரல் டெமாக்ரட்டுகளுக்கு ஆதரவாகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 1994 இல் நடைபெற்ற கட்சி மாநாட்டில், முடியாட்சியை ஒழிப்பதற்கு ஆதரவாக பேசி அதிர்வலையை ஏற்படுத்தினார்.

பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கற்றபோது அவர் கன்சர்வேடிவ் கட்சிக்கு மாறினார். 2001 பொதுத் தேர்தலில் வெஸ்ட் யார்க் ஷயர் ஹெம்ஸ்வொர்த் தொகுதியில் டோரி கட்சி வேட்பாளராக களம் கண்டு தோல்வியடைந்தார்.

சரித்திரத்தின் பக்கங்களில் இன்னொரு மார்கரெட் தாட்சராக-லிஸ் டிரஸ்! | Uk Election New Prime Minister Conservative Party

2005 இல் வெஸ்ட் யார்க் ஷயரின் கால்டர் வேலியிலும் அவருக்கு தோல்விதான் கிடைத்தது. ஆனாலும் மனம் தளராத லிஸ் டிரஸ், 2006 இல் தென்கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள கிரீன்விச்சின் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்குள் போக வேண்டும் என்ற அவரது கனவு, 2010 இல் நிறைவேறியது.

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்குள்  சென்ற இரண்டே ஆண்டுகளில் கல்வி அமைச்சராகவும், 2014 இல் சுற்றுச்சூழல் செயலாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.

பிரதமர் தெரசா மேயின் தலைமையிலான ஆட்சியில் நிதித் துறை முதன்மைச் செயலராகப் பொறுப்பு வகித்தவர், நீதித் துறை செயலாளராகவும் பணியாற்றி உள்ளார். 2019 இல் போரிஸ் ஜான்சன் பிரதமரானபோது, சர்வதேச வர்த்தகச் செயலாளராக டிரஸ் பொறுப்பேற்றார்.

2021 இல் வெளியுறவுத் துறை அமைச்சரான லிஸ் டிரஸ் தற்போது பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார்.

பிரித்தானியாவின் இரும்பு பெண்மணி என வரலாற்றில் நிலை பெற்றுவிட்ட மார்கரெட் தாட்சர் போல தனக்கு ஏழு வயதாக இருக்கம் போது பாடசாலையில் நடந்த மாதிரி பொது தேர்தல் ஒன்றில் பிரித்தானியாவின் முதல் பெண் பிரதமதரான மார்கரெட் தட்சர் போன்று பாவனை செய்து போட்டியிட்டதாக லிஸ் டிரஸ் தனது பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார்.

சரித்திரத்தின் பக்கங்களில் இன்னொரு மார்கரெட் தாட்சராக-லிஸ் டிரஸ்! | Uk Election New Prime Minister Conservative Party

எனினும் அவரைப் போன்று வெற்றியீட்ட முடியவில்லையெனவும் தனது தேர்தல் பிரசார மேடையில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் விடா முயற்சி காரணமாக முப்பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இரும்புப் பெண்மணியென அழைக்கப்பட்ட மார்கரெட் தட்சர் வழியைப் பின்பற்றி கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் வெற்றி வாகை சூடியுள்ளார்.

சரித்திரத்தின் பக்கங்களில் இன்னொரு மார்கரெட் தாட்சராக லிஸ் டிரஸ் உருவெடுப்பாரா? என்ற பதிலுக்கு காலமும் உலகமும் காத்திருக்கிறது.  

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US