பிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்துள்ள நான்கு நாட்கள் வேலை என்ற திட்டம்
பிரித்தானியாவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
திட்டம் நடைமுறையாகும் நிறுவனங்கள்
பிரித்தானியாவிலுள்ள பல வங்கிகள், பராமரிப்பு இல்லங்கள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள் உட்பட பல துறைகளை சேர்ந்த நிறுவனங்களில் நேற்று முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
உலகின் மிகப் பெரிய பைலட் சோதனை எனப்படும் இந்த சோதனையாது எதிர்வரும் 6 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.
ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் வேலை: மூன்று நாட்கள் விடுமுறை - பிரித்தானியா நடத்தவுள்ள சோதனை |
சம்பள குறைப்பு இல்லை
இதேவேளை வேலை நேரம் குறைக்கப்படுவதன் காரணமாக ஆய்விற்கு உட்படுத்தப்படும் ஊழியர்கள் எவருக்கும் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற சோதனைகள் ஸ்பெயின், ஐஸ்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவிலும் நடந்துள்ள நிலையில் அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் ஆகஸ்ட் மாதம் தங்கள் சோதனையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.