ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் வேலை: மூன்று நாட்கள் விடுமுறை - பிரித்தானியா நடத்தவுள்ள சோதனை
பிரித்தானியாவில் அடுத்த 6 மாதங்களுக்கு வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தி ஆய்வொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த ஆய்வு முதலில் 60 பிரித்தானிய நிறுவனங்களைச் சேர்ந்த 3000 ஊழியர்களை கொண்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது.
வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை
இந்த ஆய்விற்கு உட்படுத்தப்படும் ஊழியர்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்பதுடன் ஏனைய 3 நாட்களும் குடும்பத்துடன் விடுமுறை கழிப்பதற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
இந்த சோதனையானது வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி 6 மாதங்களுக்கு நடத்தப்படவுள்ளது.
இது உலகின் மிகப் பெரிய பைலட் சோதனை என கூறப்படுகிறது.
சம்பளம்
இதேவேளை வேலை நேரம் குறைக்கப்படுவதன் காரணமாக ஆய்விற்கு உட்படுத்தப்படும் ஊழியர்கள் எவருக்கும் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற சோதனைகள் ஸ்பெயின், ஐஸ்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவிலும் நடந்துள்ள நிலையில் அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் ஆகஸ்ட் மாதம் தங்கள் சோதனையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.