பிரித்தானியாவில் தீவிரமடையும் கொடிய வைரஸ் தொற்று! ஸ்தம்பிதமடையும் நிலையில் மருத்துவமனை அவசரப்பிரிவுகள்
பிரித்தானியாவில் பரவும் பக்டீரியா Strep A தொற்றுக்கு சிறுவர்கள் மத்தியில் தீவிரமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் சிறுவர் பள்ளிகளில் குறித்த பாக்டீரியா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதுடன், இதுவரை 16 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில்,தற்போது திடீரென்று Strep A பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் மருத்துவமனைகளில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவசரப்பிரிவுகள் ஸ்தம்பிக்கும் நிலை
இதன் காரணமாக பெரும்பாலான மருத்துவமனைகளில் அவசரப்பிரிவுகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, மருத்துவமனைகளில் அதிகளவு மக்கள் குவிந்துள்ளமையினால் கடும் இடப்பற்றாக்குறை,மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
எனவே,மக்கள் குழந்தைகளுடன் நேரடியாக மருத்துவமனைக்கு வருதை தர முன்னர் 111 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உரிய சிகிச்சைகள் தொடர்பில் அறிவித்தல்களை பெற்று அதன் படி செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை,இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் மருந்தகங்கள் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க கூடிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் 'பற்றாக்குறையால்' போராடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், சில மருந்தகங்களில் ஸ்ட்ரெப் ஏ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அமோக்ஸிசிலின் முற்றிலும் தீர்ந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
