சீனாவிடம் வாங்கிய கடனை அடைக்க தனது ஒரே விமான நிலையத்தை இழக்கும் உகாண்டா
சீனாவுடன் பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் தமது ஒரேயொரு சர்வதேச விமான நிலையமான என்டெப்பே சர்வதேச விமான நிலையத்தை உகண்டா சீனாவிடம் இழந்துள்ளதாக ஆபிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாத காரணத்தினால் இவ்விமான நிலையம் சுவீகரிக்கப்படவுள்ளதாகக் குறித்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காகவே உகண்டாவினால் 2015 ஆம் ஆண்டில், சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி (EXIM) வங்கி, உகண்டாவிற்கு 207 மில்லியன் டொலரை இரண்டு சதவீத வட்டி அடிப்படையில் கடனாக வழங்கியுள்ளது.
இதனிடையே உகண்டா தனது கடனைத் திருப்பச் செலுத்த முடியாமல் போனால், என்டெப்பெ விமான நிலையத்தைச் சீனா கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தக் கடன் ஒப்பந்தத்தின் சரத்தொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்தக் கடன் ஒப்பந்தத்தில் எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதால் பிற சர்வதேச அமைப்புகளின் உதவியையும் உகண்டா கோர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உகண்டா ஜனாதிபதி யோவேரி முசேவெனி, உயர்மட்ட குழுவினரைச் சீனாவுக்கு அனுப்பியுள்ளதாக குறித்த ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam