நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றி நடைபெற்ற யாழ். உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
யாழ். உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
பிரதேசம் சார்ந்த பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்ட குறித்த கூட்டத்தில் யாழ் மற்றும் கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
வழக்கம் போலவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண அவைத்தலைவருக்கான ஆசனங்கள் முன் வரிசையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதும், குறித்த யாரும் இக்கூட்டத்தில் பங்கெடுத்திருக்கவில்லை.
நீண்ட காலம்
இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பவானந்தராஜா, "அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முறையான அழைப்பு விடுக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி, கலந்து கொள்ள முடியாமை தொடர்பாக அறிவித்தலை வழங்கியிருந்தார்.
ஏனைய எவரும் அறிவித்திருக்கவும் இல்லை கலந்துகொள்ளவும் இல்லை" எனத் தெரிவித்திருந்தார். மேலும், நீண்ட காலத்துக்கு பிறகு நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் என்பதால் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
அவற்றுள் சில விடயங்களுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கப்பட்டாலும், சிலவற்றிற்கு உரிய சில காலங்கள் தேவைப்படுவதால் அதிகாரிகளின் அறிக்கைகளை எதிர்பீர்த்திருக்கின்றோம். குறித்த அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவற்றுக்கான தீர்வுகளை வழங்க நடவடிக்கைகள் எடுப்போம் எனத் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam
