துறைமுக நகர ஆணைக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இலங்கையர்களாக இருக்க வேண்டும் - உதய கம்மன்பில
கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தை கொள்கை ரீதியாக பிவித்துரு ஹெல உறுமய ஆதரித்தாலும் அந்த சட்டமூலத்தில் பல குறைகள் இருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அந்த குறைகளை உயர் நீதிமன்றம் சரி செய்யும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
வெளிநாட்டவர்களை துறைமுக நகர ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிப்பதை எமது கட்சி ஆதரித்த போதிலும் அதன் உறுப்பினர்களின் பெரும்பான்மையானவர்கள் உள்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்காக மேற்கொள்ளும் முயற்சியில், வெளிநாட்டவர்கள் எண்ணும் விதத்தை சரியாக புரிந்து கொண்டு, வெளிநாட்டு முதலீடு மற்றும் வலயத்தை ஊக்குவிப்பது தொடர்பான அனுபவங்களை கொண்டு வெளிநாட்டு நபர்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது ஆணைக்குழுவுக்கு சிறந்தது.
எனினும் அந்த ஷரத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இலங்கையர்களாக இருக்க வேண்டும் என கட்டாயம் வரையறுக்கப்பட வேண்டும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
