அமைச்சரவை கூட்டத்தில் அசௌகரியத்திற்கு உள்ளான உதய கம்மன்பில
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) கடும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக அமைச்சரவையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் கம்மன்பில தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்தில் முன்வைத்த யோசனைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa), வேறு ஒரு அமைச்சருக்கு வழங்கியதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
அமைச்சரவைக் கூட்டத்தின் போது எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, காபன் தணிப்பு கொள்கையை உருவாக்குவது மற்றும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளார்.
இதன் போது கருத்து வெளியிட்டுள்ள நிதியமைச்சர் ஏற்கனவே அரசாங்கம் காபன் தணிப்பு கொள்கையை நடைமுறைப்படுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.
நிதியமைச்சர் கூறியதை நிராகரித்துள்ள உதய கம்மன்பில, அந்த துறை எரிசக்தி அமைச்சுக்குச் சொந்தமானது எனவும் அதனை எரிசக்தி அமைச்சு தனக்குரியது என்பதால், அதனைத் தான் நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார்.
அமைச்சர் உதய கம்மன்பிலவின் இந்த கருத்தைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாத நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, காபன் தணிப்பு வேலைத்திட்டத்திற்காக நேரத்தைச் செலவிட வேண்டாம் என ஆலோசனை வழங்கியுள்ளதுடன், அந்த வேலைத்திட்டத்தைச் சுற்றாடல் அமைச்சு மேற்கொள்ளும் எனவும் அறிவித்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சராக மகிந்த அமரவீர(Mahinda Amaraweera) பதவி வகித்து வருகிறார்.
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri