கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் குருந்தூர் மலையில் உதய கம்மன்பில (Video)
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைக்கு இன்றைய தினம் (21.06.2023) நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தண்ணிமுறிப்புப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறும், தண்ணிமுறிப்புப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யுமாறும் வலியுறுத்தியே இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு திட்டமிடப்பட்ட சிங்கள மயமாக்கல் மற்றும், பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் இதன்போது கடுமையான எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ.சத்தியசீலன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயற்பாட்டாளர் அ.பீற்ரர் இளஞ்செழியன், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் இவ்வாறு உதயன் கம்மன்பில குருந்தூர்மலைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், குருந்தூர்மலை அடிவாரம் மற்றும் குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் அதிகளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.





சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
