கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி உதய கம்மன்பில நீதிமன்றில் மனு
தம்மை, கைது செய்வதனை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சட்ட விரோதமான முறையில் அநிதியான அடிப்படையில் தான் கைது செய்யப்படுவதனை தடுத்து உத்திரவிடுமாறு அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.
கடந்த 2025 ஆகஸ்ட் 5ஆம் திகதி முன்னாள் அமைச்சர் உதய கமின்பில வெளியிட்ட கருத்துக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு துறை (CID) கடந்த 27ஆம் திகதிதி அறிக்கை சமர்ப்பித்தது.
அரசியலமைப்பின் 14(1) பிரிவின் கீழ் இது பேச்சுச் சுதந்திரமாக இருந்தாலும், அந்த உரை சமூக பிரிவிணை மற்றும் இனவாதத்தை தூண்டும் வகையில் இருந்ததாகக் கூறி ICCPR சட்டத்தின் 3(1) பிரிவு மற்றும் குற்றவியல் சட்டத்தின் 120ஆம் பிரிவு கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலி உறுப்பினர் ஓருவரின் பொய் சாட்சியத்தின் அடிப்படையில் முன்னாள் கடற்படைத் தளபதி நிசாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டதனை தாம் விமர்சனம் செய்ததாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு மூலம் தன்னை மௌனமாக்கவும், எதிர்க்கட்சியை ஒடுக்கவும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியாகும் என உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.
தாம் எந்தவொரு இன சமூகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் கருத்து வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல், முன்னாள் ராணுவத்தலைவர்களுக்கு எதிரான பொய்சாட்சி, மறைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை ஆகியவற்றை பொதுமக்களிடம் வெளிப்படுத்தியதற்காக தன்னை குறிவைத்து உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளர்ர்.
அநீதியான முறையில் கைது செய்யப்படுவதனை தவிர்க்க தற்காப்பு உத்தரவு வழங்குமாறு அவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.



