நுகேகொடை பேரணி.. அரசாங்கத்தின் ஒரேயொரு பிரார்த்தனை!
பேரணி நடக்கும் போது மழை பெய்ய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் தற்போதைய பிரார்த்தனை என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நுகேகொடை பேரணி குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அரசாங்கத்தின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த 69 இலட்சம் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர்.
பிரார்த்தனை
இன்று அவர்களில் எத்தனை பேர் உண்மையை புரிந்து கொண்டுள்ளனர் என தெரியவரும்.
எவ்வாறாயினும், அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஒரு வருடத்துக்குள் மக்கள் உண்மையை புரிந்துகொண்டமையை எண்ணி நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

இப்போது அரசாங்க தரப்பினர், வானத்தைப் பார்த்து மழை வர வேண்டும் என பிரார்த்தனை செய்வதை தாண்டி அவர்களுக்கு வேறு வழியில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
You may like this..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |