உதய கம்மன்பிலவைக் கைது செய்ய தயாராகிறது அநுர அரசாங்கம்! அமைச்சர் உறுதிப்படுத்தினாரா..
தன்னைக் கைது செய்ய அநுர குமார தலைமையிலான அரசாங்கம் தயாராகி வருவதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(23.03.2026) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
27ஆம் திகதி என்ன நடக்கும்..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியை அம்பலப்படுத்தும் என்னுடைய புத்தகம், மார்ச் மாதம் 31ஆம் திகதியன்று வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இந்தப் புத்தகம் வெளியாவதை தடுக்கும் நோக்கத்துடன், மார்ச் மாதம் 27ஆம் திகதி என்னை சிறையில் அடைக்க இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
“புத்தகம் வெளியிடப்படாமல் போகலாம்” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் சமீபத்திய கருத்து புத்தகம் வெளியிடப்படுவதற்கு முன்னர் நான் கைது செய்யப்படலாம் என்று கூறுவதைப் போல அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம், உதய கம்மன்பிலவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புத்தகம் மற்றும் பிரதான சூத்திரதாரி தொடர்பான கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தன.

இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் நளிந்த, மார்ச் மாதம் 27ஆம் திகதி விசாரணைக்கு வரவிருக்கும் உதய கம்மன்பில மீதான வழக்கில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றால், அவர் கூறுவதாக சொல்லப்படும் உண்மைகளை வெளிப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், இன்றைய ஊடக சந்திப்பில் இதனை சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் கம்மன்பில, தான் மார்ச் 27ஆம் திகதியன்று கைது செய்யப்படலாம் என்பதை உறுதி செய்யும் வகையில் அமைச்சர் நளிந்தவின் கருத்து அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 19 மணி நேரம் முன்
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam