ஆபத்தான பொறிக்குள் இலங்கை! பயணத்தை தவிர்த்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங் (Video)
அண்மைய பயணங்களை நோக்கினால் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரை தவிர ஏனைய அமைச்சர்கள் இலங்கைக்கான விஜயத்தை புறக்கணிக்கின்றார்கள் என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“நேற்று இந்தியாவின் இரண்டு பயணங்கள் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
ஒன்று வான்படை தளபதி இலங்கை வந்தார். ஆனால் முக்கியமான பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாலைதீவிற்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார்.
அண்மைய பயணங்களை நோக்கினால் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரை தவிர ஏனையவர்கள் இலங்கைக்கான விஜயத்தை புறக்கணிக்கின்றார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவின் கடற்படை தளபதி வந்திருந்தார். அதற்கு முன்னர் இராணுவ தளபதி வந்திருந்தார். இந்தியாவின் றோவின் தலைவர் வந்தார்.
ஆனால் பாதுகாப்பு அமைச்சரோ பாதுகாப்பு செயலாளரோ வரவில்லை.
ரணில் அரசாங்கம் வந்த பின்னரே இவர்கள் இவ்வாறு பயணங்களை புறக்கணிப்பதை பார்க்க முடிகின்றது.”என கூறியுள்ளார்.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 18 மணி நேரம் முன்

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
