தந்தை தலைமறைவானதை உறுதிப்படுத்திய நாமல்! கோட்டாபயவின் முடிவும் இதுதான்(Video)
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இருந்ததை விட இலங்கை அரசியல் ஓரளவுக்கு ஸ்த்தீரம் அடைந்துள்ளது என நான் நினைக்கின்றேன் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியல் அடிப்படையான மாற்றம் என்று இல்லாமல் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகியவுடன் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளை பார்த்தோமென்றால், இலங்கை ஒரு தீவிரமான அரசியல் ஸ்த்தீரம் அற்ற நிலைக்குத் தள்ளப்பட போகின்றது என்ற அச்சம் காணப்பட்டது. இலங்கை இராணுவ ஆட்சியின் பிடிக்குள் செல்லலாம் என்ற நிலை காணப்பட்டது என்று சொல்லலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த வன்முறையை தூண்டியதில் மகிந்த ராஜபக்சவிற்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் தொடர்பிருக்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது, அதனை போராட்டக் காரர்களும் நம்புகின்றார்கள். அதில் ஒரு உண்மையும் இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மகிந்த தலைமறைவாக இருப்பது தொடர்பிலும், அது குறித்து அவரது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலாநிதி கீத பொன்கலன் தெளிவாக விபரித்துள்ளார்.
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam