இறுதி யுத்தத்தின் செட்டலைட் ஆதாரங்கள் முக்கிய நாடுகளிடம்!(Video)
இலங்கையின் இறுதி யுத்தத்தை இந்தியாவும் அமெரிக்காவும் செட்டலைட் ஊடாக தொடர்ச்சியாக கண்காணித்து கொண்டிருந்தது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்று அமித்ஷா அண்மையில் தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்கது ஆனால் அது அரசியல் நோக்கமாக இருந்தால் நாம் கவனமாக தான் இருக்க வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக காலத்திற்கு காலம் இந்தியா இவ்வாறு தகவல்களை தெரிவித்து வந்திருக்கிறது.
இதேவேளை இலங்கையின் இறுதி யுத்தத்தை இந்தியாவும் அமெரிக்காவும் செட்டலைட் ஊடாக தொடர்ச்சியாக கண்காணித்து கொண்டிருந்தது.
இந்நிலையில் இலங்கை மீதான இந்திராகாந்தியின் திட்டம் தோல்வியடைந்தது. பங்களாதேசிற்கு படையனுப்பி அதை பிரிப்பது போன்றோர் திட்டம் தான் அவரிடம் இருந்தது.
ஆனால் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கை மீது அவ்வாறு ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டால், தமிழீழம் அமைந்து அது அவர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் தென்னிலங்கை எதிராகவே செயற்படும் என கூறியுள்ளனர்.
இந்த விடயங்களும் இலங்கை தொடர்பான அமித்ஷாவின் கருத்துக்களில் தாக்கம் செலுத்தியிருக்கலாம்.”என கூறியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
