கோட்டாபயவிற்கு எதிரான திட்டங்கள் தகர்ந்தன: தமிழர்களின் முடிவு ஏன் இப்படி..! (Video)
இலங்கையில் தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வந்தாலும் அதன் வீரியம் குறைந்து விட்டதாக அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் ஒரு செய்தி. இந்த போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்தாலும் கூட அதன் வீரியம் குறைந்துவிட்டது.
ஏப்ரல் மாத ஆரம்பத்தில் அரசாங்கத்தை மாற்றிவிடலாம் என காணப்பட்ட நம்பிக்கையை இந்த போராட்டம் இழந்துவிட்டது என்று நான் நினைக்கின்றேன்.
ஏனெனில் பிரதான காரணம் அவர்களிடம் ஒரு தெளிவான திட்டம் இருக்கவில்லை. அத்துடன் அரசாங்க தரப்பிலிருந்து பார்க்கும் போது போராட்டம் ஆரம்பித்த காலப்பகுதியில் அரசாங்கத்தின் மத்தியில் உளவியல் ரீதியான ஒரு தாக்கம் அல்லது அதிர்ச்சி போக்கு காணப்பட்டிருந்தது. எனினும் இப்போது அவர்கள் சுதாகரித்து விட்டார்கள்.
அத்துடன் பொருளாதார பிரச்சினை ஏற்பட்ட போது சிங்கள மக்கள் செயற்பட்ட விதத்தையும் தமிழ் மக்கள் செயற்படுகின்ற விதத்திலும் ஒரு வேறுபாடு இருக்கிறமை தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
சிங்கள மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து அவர்கள் அரசாங்கத்தை போக வேண்டும் என சொன்ன போதே சர்வதேச சமூகத்திடம் போய் மண்டியிடவில்லை. தாம் செய்வோம் என்பதில் தான் அப்போதும் இப்போதும் உறுதியாக இருக்கிறார்கள்.
ஆனால் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களும், தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகளும் எதற்கெடுத்தாலும் உடனடியாக சர்வதேச சமூகத்தை தான் நாடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
வேலையின்போது திடீர் தலைவலி: அடுத்த நொடி 3 பிள்ளைகளின் தாய் மரணம்..அவுஸ்திரேலியாவில் துயரம் News Lankasri