விமானநிலையம் முற்றுகையிடப்படலாம் என ராஜபக்சர்கள் அச்சம்! முன்பு கோட்டாபய நாட்டைவிட்டு சென்ற இரகசியம்
தனக்கு பைத்தியம் என தெரிவித்து பாதுகாப்பு அமைச்சின் காலில் விழுந்து முன்னர் நாட்டிலிருந்து வெளியேறிய ஒருவர் மீண்டும் இந்த நாட்டிற்கு வந்து ஜனாதிபதியானால் நாட்டை கொண்டு செல்ல முடியாது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தாம் பதவியிலிருந்து விலகியவுடன் தம்மை மக்கள் சுற்றிவளைப்பார்கள், விமான நிலையத்தை முற்றுகையிட்டு விடுவார்கள் என்ற அச்சம் ராஜபக்சர்களுக்கு இருக்கிறது. இவர்களுக்கு வேண்டியது அமைதியான வெளியேற்றம் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான இன்னும் பல தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,