நிலைமை மோசமடைந்தால் இலங்கையில் விமான நிலையம் இழுத்து மூடப்பட்டு கைதுகள் தீவிரமடையும்! (Video)
நாடாளுமன்றம் கைமாறுகின்ற போது நிச்சயமாக விமான நிலையம் இழுத்து மூடப்பட்டு சந்தேகத்திற்கு உரியவர்கள் கைது செய்யப்படலாம் என இலங்கையில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.
இந்த விடயத்தை ஜே.வி.பி மிகவும் மும்முரமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில், ஜே.வி.பி ஆளும் தரப்பாக மாறும் வாய்ப்பு மிக அதிகமாக காணப்படுகிறது. சீனாவின் பக்கமும் அவர்கள் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஜே.வி.பி ஆளுந்தரப்பாக அல்லது ஆட்சியின் மிகப்பெரும் பங்காளியாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.
எனவே ராஜபக்சர்களில் ஊழல்வாதிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட வேண்டும் என அவர்கள் நாடாளுமன்றில் வலியுறுத்தி வருகின்றார்கள்.
இதையெல்லாம் அறிந்து மோப்பம் பிடித்து முன்கூட்டியே இங்கிருந்து செல்வது நல்லதென்றே பலர் வெளியேறி வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
