கைமீறிய கொழும்பு! இராணுவத் தளபதி - வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் திடீர் சந்திப்பின் பின்னணி (Video)
பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன வர வேண்டிய இடத்தில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் பிரசன்னமானது ஒரு குழப்பமான விடயம் என எல்லோராலும் நன்கு அறியப்பட்ட இராணுவ ஆய்வாளர் வேல்ஸிலிருந்து அரூஸ் (கலாநிதி பிரபாகரன்) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது “வெளிநாட்டு தூதரகங்களின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்களை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா சந்தித்திருந்ததாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். இங்கு இரண்டு குழப்பங்கள் இருக்கின்றன. தூதரங்களின் அதிகாரிகள் அதேபோல் பாதுகாப்பு துறை சார்ந்து இருக்கக்கூடிய ஆலோசகர்களை இராணுவத்தளபதி சந்திப்பதென்பது இராஜதந்திர நடைமுறையில் ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட முன்னேற்பாடா?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
சில சந்தர்ப்பங்களில் அவ்வாறான சந்திப்புகள் நடைபெறுவதுண்டு. எனினும் இவ்வாறான சந்திப்புகள் அரிதாகத் தான் நடைபெறுகின்றன. ஏனெனில் பாதுகாப்பு விவகாரங்களை கையாள்வதற்கு தான் பாதுகாப்பு செயலாளர் இருக்கிறார்.
தற்போதைய பாதுகாப்பு துறைச் செயலாளர் கமால் குணரட்ன. உண்மையில் அவர் தான் இது தொடர்பில் கதைத்திருக்க வேண்டும். எனினும் அந்த இடத்திற்கு சவேந்திர சில்வா வந்திருப்பமை ஒரு குழப்பமான விடயமாகும். கமால் குணரட்ன தலைமை தாங்கிய 53ஆவது படையணியை கொழும்பிற்கு நகர்த்தியிருக்கிறார்கள்.
அதேநேரம் சவேந்திர சில்வாவின் 58ஆவது படையணி தற்போது வடக்கில் தான் இருக்கிறது. கமால் குணரட்ன கதைக்க வேண்டிய இடத்தில் தற்போது சவேந்திர சில்வா கதைக்கிறார்.
சவேந்திர சில்வாவை பொறுத்தவரை அவர் அமெரிக்காவின் தடைப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர். எனவே அமெரிக்காவின் ஊடாக அவருக்கு ஒரு அழுத்தம் இருக்கலாம். சரத் பொன்சேகா மீதும் அவ்வாறானதொரு அழுத்தத்தை அமெரிக்கா வைத்திருந்தது.
என்ற போதும் சரத் பொன்சேகாவை தனக்காக அமெரிக்கா ஒரு தடவை பயன்படுத்தியும் கொண்டது. அதேபோன்றதொரு குழப்பமான நிலையை தான் இந்த பிரசன்னமும் எடுத்துக் காட்டுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
