சீன இராணுவத்திற்கு இந்தியா வழங்கிய பதிலடி இலங்கைக்கும் ஏற்படும் - முன்னாள் மேஜர் மதன்குமார்
இலங்கையை சீண்டிப்பார்ப்பதில் இந்தியாவிற்கு அச்ச உணர்வு இல்லை என இந்தியாவில் இருக்கக் கூடிய இராணுவத்தின் முன்னாள் ஓய்வுநிலை அதிகாரி மேஜர் மதன்குமார் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது “மாலைதீவாக இருக்கலாம், சீன, பாக்கிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இந்திய இராணுவத்தின் வலிமை, அதேபோன்று மாலைதீவில் இந்திய அரசினுடைய வலிமை. ஏன் இலங்கை விடயத்தில் மட்டும் பெரும்பான்மையோடு இருக்கக்கூடிய அரசு 7 ஆண்டுகள் காத்திருப்பு, அதாவது தொடக்க காலம் என்று 3 ஆண்டுகளை விட்டுவிட்டாலும் மிகுதியாக இருக்கக்கூடிய 4 ஆண்டுகளில் இலங்கையை சீண்டிப்பார்ப்பதில் இந்தியாவிற்கு ஓர் அச்ச உணர்வு இருக்கிறதா?” என கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு அவர் பதிலளிக்கையில்,
அச்ச உணர்வு என்பது இல்லை. இதனை நான் முன்னுரிமை என்று சொல்வேன். 2014இற்கு பிறகு இந்தியாவின் முன்னுரிமை நிலையை எடுத்தால் இலங்கை ஓர் அண்டை நாடு.
மேற்கு எல்லைப்பக்கம் பாக்கிஸ்தானில் ஆரம்பித்தவர்களுக்கு பாக்கிஸ்தான், நேபாளம், பூட்டான், சீனா, பங்களாதேஷ், இலங்கை, மாலைதீவு இது அனைத்தும் அண்டை நாடுகள் இந்தியாவிற்கு.
இதில் இந்தியாவில் தொடர் எதிரியாக இருப்பது பாக்கிஸ்தான். பாக்கிஸ்தானுடனான உறவு, பாக்கிஸ்தானை எப்படி கட்டுக்குள் வைப்பது?, பாக்கிஸ்தானிலிருந்து செயற்படும் தீவிரவாதிகளை எப்படி கட்டுக்குள் வைப்பது? இது தான் இந்தியாவின் முன்னுரிமை.
இதற்கு பிறகு ஒரு மிகப்பெரிய எதிரியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்கும் சீனாவின் ஆதிக்கம் எந்தளவிற்கு இருக்கும், சீனாவின் வருங்கால ஆபத்து இந்தியாவிற்கு எந்தளவிற்கு இருக்கும் என்பது இரண்டாவது என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri