தியாக தீப சிலை விவகாரம்: EPDP அழுத்தமா..! அகற்றப்பட்ட சிலைக்கு பின்னால் அம்பலமாகும் மர்மங்கள்
யாழ். நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிலையை எப்படியாவது அகற்ற வேண்டும் என குறியாக வேலை செய்தது சீ.வீ.கே சிவஞானமும், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேரனும் தான் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்ற தரப்பினர் தமிழ்த்தேசிய நீக்கத்தை செய்ய விரும்புகின்றார்கள்.
தியாக தீப சிலை விவகாரத்தில் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஆழமாக ஆராய்ந்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.
மேலும், தியாக தீபம் திலீபனின் சிலையை அதே இடத்தில் வைப்பதற்கு தாம் நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்துள்ளார்.
இதுபோன்று, இன்றைய தினம் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்னும் ஆழமாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,