சர்வதேச மட்ட கணித போட்டிக்கு யாழில் இருந்து 25 மாணவர்கள் தெரிவு
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள மன கணித சர்வதேச மட்ட போட்டியில், யாழில் இருந்து 25 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில் குறித்த மாணவர்கள் உள்ளிட்ட இலங்கையில் இருந்து 62 மாணவர்கள் பங்கேற்கவுள்ளதோடு கோலாலம்பூரில் எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த போட்டியில் 80 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இப்போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை முழுவதும் உள்ள மாணவர்களிலிருந்து திறமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 62 மாணவர்களைக் கொண்ட ஒரு குழு மலேசிய செல்லவுள்ளது.
8 நிமிடங்களில் 200 கணக்குகள்
இந்த இளம் திறமையாளர்கள் 8 நிமிடங்களில் 200 கணக்குகளைத் துல்லியமாகவும் வேகமாகவும் செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் எனவும், கடந்த காலங்களில் பல இலங்கை மாணவர்கள் தமது திறமைகளை நிரூபித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
அதேவேளை அண்மையில் கொழும்பில், நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில் நாடு முழுவதுமிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுத் தமது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிக்கிண்ணங்களையும் பதக்கங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
