இலங்கை மின்சார சபையின் நிலம் தாரைவார்ப்பு: உள்நுழையும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம்
ஐக்கிய அரபு இராஜ்யத்தினுடைய "கெபிட்டல் இன்வெர்ஸ்மென்ட் எல்.எல்.சி நிறுவனத்திற்கு நட்சத்திர விடுதி அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான, நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணியை ஒதுக்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தை அண்மித்துள்ள காணியொன்றும், நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள சிறிய பகுதி ஒன்றும், குறித்த குத்தகை திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த நிறுவனத்திற்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் நீர்த்தேக்க பிரதேசத்தை வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுமதியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை அங்கீகாரம்

மேலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக முன்வைத்த யோசனைக்கு அமைவாக, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri