மூன்றாம் உலகப்போர் தொடங்க அமெரிக்கா விரும்பினால்... வடகொரிய ஜனாதிபதி கடும் கண்டனம்
அமெரிக்கா வெனிசுலா(Venezuela) மீது நேற்றையதினம் நடத்திய தாக்குதலானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
அதுமட்டுமன்றி வெனிசுலா ஜனாதிபதி நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தமைக்கு பல நாடுகளும் அதன் தலைவர்களும், அமைப்புகளும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
கடும் கண்டனம்
வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ரஷ்யா, ஈரான், சீனா உள்ளிட நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
இந்நிலையில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிம் ஜாங் உன்
வடகொரியாவின் அரசு ஊடகம் மூலம் கிம் ஜாங் உன் வெளியிட்ட அறிக்கையில்,
“அமெரிக்கா தனது ஏகாதிபத்திய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு நாட்டின் இறையாண்மையைப் பறித்துள்ளது.

எங்களது நெருங்கிய நண்பரான மதுரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஒரு நாட்டின் தலைவரைக் கடத்துவது சர்வதேச பயங்கரவாதம். அமெரிக்கா உலக நாடுகளுக்குப் பாடம் சொல்லும் தகுதியை இழந்துவிட்டது.
இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கை பாடம். ஆனால், வடகொரியா அப்படிப்பட்டது அல்ல.
மூன்றாம் உலகப்போர்
எங்களது நட்பு நாடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டால், நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். ட்ரம்பின் இந்தச் செயல் உலகை மற்றுமொரு பேரழிவை நோக்கித் தள்ளுகிறது.
மூன்றாம் உலகப்போர் தொடங்க அமெரிக்கா விரும்பினால், அதை எதிர்கொள்ள நாங்கள் தயார். எங்களது ஏவுகணைகள் சரியான இலக்கை நோக்கித் தயாராக உள்ளன.

உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அமெரிக்காவின் இந்த அராஜகப் போக்கை எதிர்க்க வேண்டும். இல்லையெனில், அடுத்த இலக்கு நீங்களாகக் கூட இருக்கலாம்.
ட்ரம்ப் நெருப்போடு விளையாடுகிறார். மதுரோவின் கைது என்பது ஒரு தனிமனிதனின் கைது அல்ல, அது உலக நாடுகளின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். இதற்கான விலையை அமெரிக்கா மிகக் கடுமையாகக் கொடுக்க வேண்டியிருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.