அமெரிக்கா - இஸ்ரேல் - வளைகுடா: நடந்தது என்ன - சூடுபிடிக்கும் களம்..! (Video)
மத்திய கிழக்கு அமெரிக்காவை விட்டு வெகு தூரம் தள்ளிச் சென்று கொண்டிருக்கிற ஒரு பிரதேசமாக மாறிக்கொண்டிருக்கிறது.
மத்திய கிழக்கின் அத்தனை விடயங்களிலும் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு தேசமாக கடந்த சில தசாப்தங்களாக பரிணமித்து வந்த அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக தனது பிடியை அங்கு இழந்து வருவதை கடந்த சில வாரங்களாக காணக்கூடியதாக இருக்கிறது.
சவுதி அரேபியாவும் ஈரானும் சமாதான முடிவுக்கு வந்ததை மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு ஒரு முடிவுரை எழுதுவதாகவே கருதுகிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஈரான் சென்றிருந்த ஈராக்கிய அதிபர் அப்துல் லத்தீப் ரஷீதிடம் ஈரானிய சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனி கூறி இருந்த விடயம் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது என்பதை கட்டியம் கூறுவது போலவே இருந்தது.
ஒரு அமெரிக்கன் கூட ஈராக்கில் இருப்பது மிகப் பெரிய விடயம் என்று அவர் தெரிவித்திருந்தார், அதாவது எதிர்வரும் காலத்தில் ஒரு அமெரிக்கர் கூட ஈராக்கில் இருக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார், பல தசாப்தங்களாக மத்திய கிழக்கில் கோலோச்சி கொண்டு இருந்த அமெரிக்காவுக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது?
மத்திய கிழக்கில் உள்ள அத்தனை நாடுகளுக்கும் தலையெழுத்தை வரைந்து கொண்டிருந்த அமெரிக்கா எப்படி அங்கிருந்து ஓரங்கட்டப்பட்டது?
உண்மையிலேயே அமெரிக்கா மத்திய கிழக்கில் உள்ள தனது குடியை இழந்து விடுமா அல்லது அமெரிக்கா மத்திய கிழக்கில் தன்னை நிலைநிறுத்த ஏதாவது காய் நகர்த்தர்களை செய்யுமா ?