ஜப்பானை தாக்கும் கானுன் சூறாவளி-விமானப் பயணங்கள் இடைநிறுத்தம்
கானுன் சூறாவளி, ஜப்பானின் தென்மேற்கு பகுதியான ஒக்கினவா மாகாணத்தை நெருங்கியுள்ளது.
இதில், ஒருவர் பலியாகி இருக்கும் நிலையில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒக்கினவாவில் உள்ள சில இடங்களில் நேற்று காலை, மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்திலான பலத்த காற்று வீசியதோடு, கடந்த 24 மணி நேரத்தில் 250 மில்லிமீட்டர் மழை பெய்ததாக ஜப்பானிய வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்கள் வெளியேற்றம்
சூறாவளி வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதால், சுற்றுலாவிற்குப் புகழ் பெற்ற அம்மாகாணத்தில் உள்ள 7 இலட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளையில், அப்பகுதியிலுள்ள வீடுகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாஹவில் விமான நிலையம் நேற்று(02.08.2023)இரண்டாவது நாளாகவும் முழுமையாக மூடப்பட்ட நிலையில் சுமார் 951 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 22 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
