தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் : கதிர் தெரிவிப்பு
தியாக தீபம் திலீபனின் நினைவு தின அனுஷ்டிப்பு நிகழ்வுகள் அரசியல் கட்சிகள் ,பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கப்படும் என ஜனாநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தியாகி திலீபனின் நினைவு தினத்தில் கடந்த காலத்தில் பல்வேறுபட்ட குழப்பநிலைகள் மற்றும் முகம் சுழிக்கும் வகையான செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.
சிறந்த முறையில் ஒன்றிணைக்க நடவடிக்கை
இந்நிலையில் அவற்றை தவிர்க்கும் முகமாக ஒரு அரசியல் கட்சியோ, பொது அமைப்போ தனிப்பட்ட முறையில் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதை தவிர்த்து, அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்து நினைவேந்தல் நிகழ்வினை உணர்வுபூர்வமாக நடத்தப்படுவதையே பொது மக்களும் நாமும் விரும்புகிறோம்.
இவ்வாறான நிலையில் எமது கட்சியின் தலைமையின் கீழ் அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு நினைவுதின அனுஷ்டிப்பை சிறந்த முறையில் ஒன்றிணைக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இது குறித்து நாம் பல்வேறுதரப்புடன் கலந்துரையாடியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
