யாழில் இரண்டு இளைஞர்கள் கைது!
யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இன்றையதினம்(5.1.2026) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணை
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் வைத்து 29 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 4 கிராம் 90 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri