உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள்! நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவதையிட்டு இன்று நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட தேவாராதனைகள் நடைபெறவுள்ளன.
இவற்றுக்கு ஆகக்கூடிய பாதுகாப்பை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதுதொடர்பாக அனைத்து பிரதி பொலிஸ் மாஅதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் தொகுதி, பொலிஸ் பிரிவின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதேசத்திலுள்ள அருட்தந்தையர்கள் மற்றும் ஏனைய சமயத் தலைவர்களுடன் பாதுகாப்பு நிலைமை குறித்து கலந்துரையாடுமாறு அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri