கோர விபத்தில் இரண்டு வயது குழந்தை பலி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 02 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (14) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மத்தள திசையிலிருந்து கொட்டாவை திசை நோக்கி பயணித்த வானின் டயரில் காற்று இறங்கியமை காரணமாக நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் வானில் பயணித்த மூன்று குழந்தைகள் படுகாயமடைந்து, எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
கதிர்காமம் ஏழுமலை பகுதியை சேர்ந்த 02 வயதும் 02 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து இடம்பெற்ற போது வானில் சிறுவர்கள் உட்பட 12 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
