தென்னிலங்கையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்கள்
மாத்தறை - பிரவுன்ஸ்ஹில் டெரன்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்களாக பணிபுரியும் 2 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாலட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய பெண்ணும் மாத்தறை அபேகுணவர்தன மாவத்தையில் வசிக்கும் 70 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளரான பெண் நேற்று (07.10.2023) காலை மாத்தறையில் உள்ள தனது வியாபார இடத்திற்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய போது கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை கண்டுள்ளார்.

உறவினர் வீட்டுக்கு சென்ற பொலிஸ் அதிகாரி மீது துரத்தி துரத்தி துப்பாக்கி சூடு : சினிமா பாணியில் சம்பவம்
பொலிஸார் விசாரணை
வீட்டின் வெளியே அமைந்துள்ள குளியலறை மற்றும் கழிவறையில் சடலங்கள் காணப்பட்டதாகவும், பின்னர் இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு பெண்களையும் கொலை செய்த பின்னர், அந்தந்த வீட்டில் இருந்த பாதுகாப்பு கமரா அமைப்பின் தரவுகளை சந்தேக நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
எனினும் பக்கத்து வீடொன்றின் பாதுகாப்பு கமராக்களை சோதனையிட்ட போது குறித்த நபர் குறித்த தகவல் தெரியவந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 23 மணி நேரம் முன்

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
