வெளிநாட்டிலிருந்து வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு பெண் விமானப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த பெண்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் இன்று அதிகாலை விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் டுபாயில் வீட்டுப் பணிப்பெண்களாக சென்றிருந்து போதும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தற்காலிக கடவுச்சீட்டு
இந்நிலையில், இலங்கை தூதரகம் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அவர்களை தற்காலிக கடவுச்சீட்டின் கீழ் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மென்செஸ்டர் ரக 20,000 சிகரெட்டுகள் அடங்கிய 100 சிகரெட் பெட்டிகள் அவர்களது பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
சந்தேகநபர்களில் ஒருவர் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் எனவும் மற்றையவர் மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணையில் விடுதலை
இவர்கள் Fly Dubai Airlines இன் FZ-569 விமானத்தில் டுபாயில் இருந்து இன்று அதிகாலை 12.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.





Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam
