மட்டக்களப்பின் இருவேறு இடங்களில் இரு பெண்கள் கைது
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 30 லீற்றர் கசிப்புடன் பெண் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.கே.பண்டார தெரிவித்துள்ளார்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை சம்பவதினமான நேற்று முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனையில் நேற்று பெண் ஒருவரை கஞ்சாவுடன் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் இருவேறு இடங்களில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam
