நோர்வேயில் இலங்கையரொருவருக்கு நேர்ந்த கதி! யாழை சேர்ந்த சகோதரிகளின் மோசமான செயல்

Sri Lanka Norway Sri Lanka Police Investigation Money
By Dhayani Nov 21, 2022 08:15 AM GMT
Report

போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 120 மில்லியன் ரூபாவை மோசடி செய்த சகோதரிகள் இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 30 மற்றும் 34 வயதுடைய யாழ்ப்பாணம் - நாவாந்துறையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரை 2021 ஜனவரி முதல் ஜூன் வரை 23 வங்கிக் கணக்குகள் மூலம் 120 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நோர்வேயில் இலங்கையரொருவருக்கு நேர்ந்த கதி! யாழை சேர்ந்த சகோதரிகளின் மோசமான செயல் | Two Women Arrested Defrauding 120 Million Rupees

இறந்த தங்கள் தந்தை ஒரு பணக்கார தொழிலதிபர் என்றும், அவருக்கு ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தங்க நகைகள் உட்பட பண சொத்துக்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

நிதியை விடுவிப்பதற்கான சட்டச் சிக்கல்களைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் கூறியிருந்தனர். இந்த சூழலில் இருவரும் தன்னை ஏமாற்றி வந்ததை நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் உணர்ந்துள்ளார்.

அவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் சகோதரிகள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரும் பல்வேறு அரச அதிகாரிகள், வங்கி முகாமையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் கிராம அலுவலகர்களால் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள் உட்பட ஏராளமான போலி ஆவணங்களை வைத்திருந்ததாக தெரியவருகிறது.

நோர்வேயில் இலங்கையரொருவருக்கு நேர்ந்த கதி! யாழை சேர்ந்த சகோதரிகளின் மோசமான செயல் | Two Women Arrested Defrauding 120 Million Rupees

வங்கி புத்தகங்கள் மற்றும் வங்கி பற்றுச்சீட்டுகளும் அவர்களிடம் இருந்துள்ளன. இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, சகோதரிகள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக தகவல் - தீபன், ராகேஷ்

முதலாம் இணைப்பு

நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரை ஏமாற்றி 120 மில்லியன் ரூபாவை ஏமாற்றிய இரண்டு பெண்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், நாவந்துறை பகுதியை சேர்ந்த 30 மற்றும் 34 வயதுடைய சகோதரிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்வேயில் இலங்கையரொருவருக்கு நேர்ந்த கதி! யாழை சேர்ந்த சகோதரிகளின் மோசமான செயல் | Two Women Arrested Defrauding 120 Million Rupees

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

குற்றப்புலனாய்வு பிரிவினர் இவர்கள் இருவரையும் நேற்று கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது அவர்கள் டிசம்பர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US