வவுனியா நகரில் பாரவூர்தியுடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து : ஒருவர் பலி (Photos)
வவுனியா நகரப் பகுதியில் பாரவூர்தியுடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகர பள்ளிவாசலின் முன்பாக இன்று (24.11.2023) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகள்
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா ஏ9 வீதியில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக கோவில்குளம் நோக்கி சென்ற பாரவூர்தி, நகர பள்ளிவாசல் முன்னால் பயணித்துக் கொண்டிருந்த போது, நகரப் பகுதியில் இருந்து வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் வவுனியா, நெடுக்குளம் பகுதியைச் சேர்ந்த கும்புகேகெதர முத்துபண்டா (வயது 71) என்பவரே உயிரிழந்துள்ளார். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam