கனடாவில் ஆபத்தானவர்களாக அறிவிக்கப்பட்ட இரு தமிழர்கள்! டொராண்டோ பொலிஸார் வலைவீச்சு
கொள்ளை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இரண்டு தமிழர்களைத் தேடுவதாக டொராண்டோ பொலிஸார் அறிவித்துள்ளனர்.
டொராண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 30ம் திகதி மார்க்கம் வீதி பகுதியில், மக்நிகோல் அவென்யூவில் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து பலவந்தமாக ஒருவரைக் கடத்திச் சென்று, தாக்கி, பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் தேடப்படுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் டொராண்டோ பொலிஸார், தேடப்படும் இருவர் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட நபரை சந்தேகநபர்கள் கை மற்றும் கால்களை கட்டி உடல் ரீதியாக தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் குறித்த தகவல்களை டொராண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, 42 வயதுடைய மார்க்கம் பகுதியை சேர்ந்த ராம்நாராஜ் ராஜரட்ணம், டொராண்டோவை சேர்ந்த கோகுலநாதன் ஐயாத்துரை ஆகியோர் பற்றிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த இருவரும் ஆபத்தானவர்களான கருதப்படுவதால், இவர்கள் குறித்த தகவல்களை 9-1-1 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.