கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 தமிழ் பெண்கள் கைது
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இரண்டு இலங்கைப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் கிளிநொச்சியை சேர்ந்த 31 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. மற்றைய பெண் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 26 வயதுடையவராகும்.
கத்தார் ஏர்வேஸ்
விமானப் போக்குவரத்து அனுமதிக்காக அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் சந்தேகம் அடைந்த கத்தார் ஏர்வேஸ் அதிகாரிகள் இருவரையும் விமான நிலைய குடிவரவு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், இந்த இத்தாலிய விசாக்கள் போலியான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது.
அதற்கமைய, கைது செய்யப்பட்ட பெண்களிடம் விசாரணகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri