வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்! உடலில் காணப்படும் காயங்களால் எழுந்துள்ள சந்தேகம்
கிரிந்திவெல பொலிஸ் பிரிவு மற்றும் வலஸ்முல்ல பொலிஸ் பிரிவில் இரண்டு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகத்திற்கிடமான மரணங்கள் நேற்று (12.08.2023) பதிவாகியுள்ளன.
வலஸ்முல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகல்கொடெல்லய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
உயிரிழந்த பெண்ணின் தலையில் பல இரத்தக் கறைகள் மற்றும் காயங்கள் காணப்பட்டதை அவதானித்த நிலையில் இந்த மரணம் கொலையா என்பது தொடர்பில் வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கிரிந்திவெல-ஹங்கமுவத்த பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகாமையில் தாக்குதலுக்கு இலக்காகி கீழே விழுந்த நபர் ஒருவர், ரதாவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உடகம பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தாக்குதலினால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் உயிரிழந்தாரா என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri
