அரச உத்தியோகத்தரின் தங்க ஆபரணங்கள் கொள்ளை: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வீதியில் சென்ற இளம் அரச உத்தியோகத்தர் ஒருவரின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்ற இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நெக்லஸ் மற்றும் பென்டன்ட் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கமைய சந்தேகநபர்கள் இருவரையும் ஜூலை 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதவான் கே.பி.ஆர்.எல்.விதானகமகே நேற்று (29) உத்தரவிட்டார்.
விளக்கமறியல் உத்தரவு
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் 19 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேகநபர்களால் வேறு ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
சீனாவின் ரகசிய அணு ஆயுத விரிவாக்கம்- மலைப்பகுதியில் புதிய ஆயுத நிலையங்கள் கண்டுபிடிப்பு News Lankasri
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam