நம்பிக்கையில்லா தீர்மானம்! - அரசு பக்கம் சாயும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.
“ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டுவந்துள்ள இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க அந்த கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக 155 வாக்குகள் கிடைக்க கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீதான நம்பிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்காலத்தில் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியை விட்டு வெளியேறி அரசாங்கத்தில் இணைந்துகொள்வார்கள்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
