கிளிநொச்சியில் இரு பொலிஸார் இடைநிறுத்தம்
கிளிநொச்சியில் (Kilinochchi) பொதுமகன் ஒருவரிடம் கையூட்டு வாங்க முற்பட்ட குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், நேற்றைய தினம் (03.09.2024) குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கு அமைவாக விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் இருவரையும் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை முன்னெடுப்பு
இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த பொதுமகனிடமிருந்து 5000 ரூபா பணத்தினை பெற இரு பொலிஸாரும் முயற்சித்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், இருவரையும் நேற்று முதல் பணியிலிருந்து இடைநிறுத்துமாறும் பொலிஸ் அத்தியட்சகர் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, குறித்த இருவரும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |