சீனாவால் இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்ட இரு விமானங்கள்
சீனாவிடமிருந்து இரண்டு செயற்திறன் மிக்க விமானங்கள் இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அதிநவீன Harbin Y-12-IV ரக இரு விமானங்களே இன்றையதினம் (05.12.2023) இரத்மலானை விமானப்படை தளத்தில் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு விமானமும் 15 பேர் பயணிக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இலங்கை அரசாங்கம் மற்றும் சீன தேசிய வானூர்தி தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தாபனத்தின் சார்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இடையில் 16 டிசம்பர் 2019 அன்று ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய ஜனநாயகப் போராட்டம் 48 நிமிடங்கள் முன்

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam
