வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் இருந்து வந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலநறுவை மற்றும் கொழும்பு பகுதிகளை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனனர்.
சட்டவிரோதமாக பெருந்தொகை வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயணப்பொதி
விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் இருவரும் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 41,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவருக்கும் எச்சரிக்கை விடுத்து அவர்களை விடுதலை செய்துள்ளனர்.
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri