யாழில் வீடொன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது
யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து, வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றது. குறித்த வீட்டினுள் புகுந்த இருவர் அங்கிருந்தோரை எழுப்பி அடித்துக் காயப்படுத்தி அச்சுறுத்தி மூன்றரைப் பவுண் நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பித்துச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்,
ஏழாலை குப்பிளானைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடைய சந்தேக நபர்கள் இன்று கைது
செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri