கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் சுங்க வரி செலுத்தாமல் கொண்டுவரப்பட்ட 12 மடிக்கணினிகள் மற்றும் 55 மதுபான போத்தல்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்பிரிவு அதிகாரிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
பயணப்பொதிகள்
இலங்கைக்கு வந்த இரண்டு விமானப் பயணிகளின் பயணப்பொதிகள் சோதனையின் போது, பாதுகாப்பான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து வந்த இலங்கை வர்த்தகர்கள் இருவர் குறித்த பொருட்களை கொண்டு வந்துள்ள நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri